மீன் பிரியர்களுக்கு மொறு மொறு மீன் கோலா உருண்டை எப்படி செய்யணும் தெரியுமா?

கோலா உருண்டைகளில் பல வகைகள் உள்ளது , அதில் நாம் காண இருப்பது மீன் கோலா உருண்டை.

செய்ய தேவையான பொருட்கள்

வஞ்சிரம் மீன் – 250 கிராம்

பிரெட் தூள் – தேவைக்கு ஏற்ப

சோள மாவு – 2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் – 1

உருளைக்கிழங்கு – 1

பூண்டு – 4 பல்

இஞ்சி – சிறிதளவு

மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

மிளகு தூள் – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

மிளகாய் தூள்- காரத்திற்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்

எண்ணெய்,உப்பு – தேவைக்கு ஏற்ப

கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் பூக்களின் பலன்கள் தெரிந்து கொள்வோமா?

செய்முறை :

வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும். அடுத்து
மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீன் துண்டுகள் சிறிது உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்த மீனை ஆறவிட்டு, தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டைசேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

அடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை போட்டு அதை நன்கு கலந்து விடவும். பின் அதில் மிளகு தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

குழந்தை பெற்ற பின் வரும் வழியை சரி செய்யும் உளுத்தம் கீர்! மிஸ் பண்ணாதிங்க!

பிறகு அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.

அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும் போது கொத்தமல்லியை தூவி கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

மேலும் ஒரு பவுலில் சோள மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

பிடித்து வைத்துள்ள உருண்டைகளை சோள மாவில் நன்கு முக்கி கொள்ளவும் பின்பு பிரெட் தூளில் நன்றாக பிரட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்து ஓரமாக வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு பக்குவமாக பொரித்து எடுக்கவும்.

பொரித்த உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும் மீன் கோலா உருண்டை தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.