விஷாலின் 31வது படத்தின் டைட்டில்-பர்ஸ்ட்லுக் போஸ்டர் அறிவிப்பு!

07363097a2cfa5436ab5b99db7c21444

நடிகர் விஷால் நடித்து வரும் 31வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்நிலையில் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி இந்த படத்திற்கு ’வீரமே வாகை சூடும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி என்பவர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

4c78218d5e81b57df6614aa17f687893

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.