பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதியை சற்றுமுன்னர் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு 500 இடங்கள் காலியாக இருந்தது என்றும் ஆனால் இந்த ஆண்டு அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment