முதலில் நியாயத்திற்கு பல்லக்கு தூக்குங்க அண்ணாமலை; அமைச்சர் சேகர் பாபு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்குவது விட்டுவிட்டு நியாயத்திற்கு பல்லக்கு தூக்க வேண்டும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அறநிலைத்துறை அலுவலர்கள் மற்றும் மண்டல இணை அலுவலர்களுக்கு இலவசமாக வாக்கிடாக்கி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடந்த மானிய கோரிக்கையில் 112 அறிவிப்புகள் வெளியிட்டதில் 1690 பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்குவது விட்டுவிட்டு நியாயத்திற்கு பல்லக்கு தூக்க வேண்டும் என கூறினார்.

மேலும் தருமபுர ஆதீன பட்டின பிரவேசம் குறித்து முதல்வர் அனைவருக்கும் உகந்த நல்ல முடிவை தமிழக  முதல்வர்  எடுப்பார் என தெரிவித்தார்.

மேலும் திருச்செந்தூர் கோவிலில் ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி கொண்டு பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அர்ச்சகர்ஆல் எழுந்த பிரச்சனைகள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment