145 வருட கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதல்முறை.. பாகிஸ்தானின் மோசமான சாதனை!

145 ஆண்ட கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் முதல் 2 விக்கெட்டுகளும் விக்கெட் கீப்பிங் முறையில் அவுட் செய்யப்பட்ட சம்பவம் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று உள்ளது.

நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து தற்போது விளையாடி வரும் நிலையில் இன்று கராச்சியில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேட்டிங் செய்ய களம் இறங்கினார்கள்.

இந்த நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முதல் இரு விக்கெட்டுகளையும் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் மூலம் அவுட் ஆக்கினார்.

145 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு விக்கெட்டுகள் ஸ்டெம்பிங் மூலம் அவுட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான சாதனைக்கு உள்ளான பாகிஸ்தான் அணிக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.