Connect with us

கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சூர்யா

Entertainment

கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சூர்யா

42fdc6cbb55a0f309cf24e46928fe127-1

சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்று இருவரது ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என சூர்யா, கார்த்தி கூறி வந்தனர்.

இந்த நிலையில் கார்த்தி நடித்து முடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

f2b1754722dae698a78a3ff7eb012515இந்த படத்தில் ஒரு ரேக்ளா ரேஸ் போட்டி காட்சி இரு இருப்பதாகவும், இந்த காட்சியில் சூர்யா ரேக்ளா ரேஸ் போட்டியின் பார்வையாளராக நடித்திருப்பதாகவும், அதுமட்டுமின்றி ரேக்ளா ரேஸில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யாவாகவே அவர் தோன்றுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா தான் என்பது அனைவரும் தெரிந்ததே

கார்த்தி, சாயிஷா, பிர்யா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top