Connect with us

முதன்முறையாக குரங்கம்மை பாதிப்பு உறுதி..!! பீதியில் பொதுமக்கள்..!!

செய்திகள்

முதன்முறையாக குரங்கம்மை பாதிப்பு உறுதி..!! பீதியில் பொதுமக்கள்..!!

ஆப்பிரிக்காவில் தொடங்கிய குரங்கு அம்மை நோய் ஆனது உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக இத்தகைய வைரஸால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தோனேசியாவில் முதன்முறையாக குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனிடையே அண்டை நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்ததாகவும், ஆகஸ்ட் 5ம் தேதி வரை 15 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், தாய்லாந்திலும் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்தியாவில் ஏழு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியான நிலையில், தமிழகத்தினல் தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top