News
உலகில் முதல்முறையாக கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதால் ஆட்சிகலைப்பு!
உலகில் முதல் முறையாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறிய ஒரு நாட்டின் அரசு கலைக்கப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று துனிசியா. இந்நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தவறிய துனிசிய நாட்டு அரசுக்கு எதிராக அந்நாட்டின் பொதுமக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்நாட்டின் அதிபர் அதிரடியாக ஆட்சியை கலைக்க உத்தரவிட்டார்
இதனை அடுத்து அந்நாட்டின் பிரதமர் ஹைச்செம் மெச்சி பதவியை இழந்ததோடு நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் முதல் முறையாக கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய ஒரு நாட்டின் அரசு கலைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸை சரியாக கட்டுப்படுத்த தவறிய நாடுகளின் அரசுகளை தாராளமாக கலைக்கலாம் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்
