News
இந்தியாவில் முதல்முறை: வாக்களிக்க பணம் கொடுத்த பெண் எம்பிக்கு ஜெயில் தண்டனை!
இந்தியாவில் முதல் முறையாக வாக்களிக்க பணம் கொடுத்த பெண் எம்பி ஒருவருக்கு 6 மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தேர்தல் என்று வந்துவிட்டால் பணம் பயங்கரமாக விளையாடும் என்றும் வாக்காளர்களுக்கு போட்டியிடுபவர்கள் 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை கொடுத்து வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. பறக்கும் படையினர் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் இந்த பணப் பட்டுவாடாவை தவிர்க்க முடியவில்லை என்பதே உண்மையாக உள்ளது
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பெண் எம்பி மலோத் கவிதா என்பவரை கையும் களவுமாக பறக்கும் படையினர் பிடித்தனர். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது
விசாரணையில் பெண் எம்பி மலோத் கவிதா தான் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். நாட்டிலேயே முதல் முறையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க குற்றச்சாட்டுக்காக எம்பி ஒருவர் சிறை தண்டனை அனுபவிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
