இந்தியாவை பழிவாங்குமா வெஸ்ட் இண்டீஸ்? முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்.!!

தற்போது இந்திய அணி அதிதீவிரமாக தனது திறமையை வெளிக்காட்டிக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றாலும் கூட சக வீரர்கள் நன்றாகவே விளையாடிக் கொண்டு வருகின்றனர்.

அதற்கு நல்லதொரு உதாரணமாக அமைந்துள்ளது மேற்கத்திய தீவுகள் உடனான சுற்றுப்பயணம். ஏனென்றால் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் 50 ஓவர் போட்டிகள் நடைபெற்றது.

மூன்று 50 ஓவர் போட்டிகள் கொண்ட இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுவதுமாக இந்திய கிரிக்கெட் அணி வென்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கத்திய தீவுகள் அணியை சொந்த மண்ணிலேயே வாசஸ் அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உள்ள நிலையில் இன்றைய தினம் முதலாவது டி20 தொடர் தொடங்குகிறதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இந்தியா-மேற்கத்திய தீவுகள் அணிக்கே இடையான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெறுகிறது.

டிரினிடாட்டின் பிரையன் லாலா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ODI தொடரை தோற்ற மேற்கத்திய தீவு அணி 20 ஓவர் போட்டியில் மிகுந்த கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
T20