Connect with us

முதல் டி20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!

விளையாட்டு

முதல் டி20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!

e156896d0e88d80a56cd3513094af61b

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடைபெற்ற இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கையை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனை அடுத்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 

மிக அபாரமாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த புவனேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் ஆட்டநாயகன் விருதை அவர் தட்டிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மிக அபாரமாக பேட்டிங் செய்து 50 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான அடுத்த டி20 கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு நகரில் நடைபெற உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in விளையாட்டு

To Top