இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது

இந்த 2022ம் ஆண்டு ஆரம்பித்து நான்கு நாட்கள்தான் ஆகியுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

கேள்வி நேரத்தின் முதல் கேள்வியாக பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ தனது முதல் கேள்வியை கேட்டார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தங்கள் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

இதில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது நாகை மாவட்டம் கீழநேரி சரி செய்யப்படுவதை பற்றி விளக்கமளித்தார்.

மெட்ரோ ரயில் சேவை மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை கொண்டு வர பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி பல கேள்விகளின் முன்வைப்புகளுடன் தற்போது மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment