திருமணத்திற்கு பின்னரும் கோலிவுட் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரே நடிகை சமந்தா தான் என்பது தெரிந்ததே. திருமணமான மற்ற நடிகைகள் அக்கா, அம்மா, அண்ணி வேடங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சமந்தா மாஸ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்
இந்த நிலையில் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சமந்தா, அங்கிருந்து மாலத்தீவின் அழகிய இயற்கை காட்சிகளுடன் கூடிய புகைப்படங்களை பதிவு செய்து தனது ரசிகர்களுக்கு விருந்தளித்தார் என்பதும், அவருடைய ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் லைக்ஸ்கள், கமெண்டுஸ்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். இந்த தொடர் அவரை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப்தொடருக்காக சமந்தாவுக்கு டுவிட்டரில் இமோஜி கிடைத்துள்ளது. தென்னிந்திய நடிகைகளில் டுவிட்டரில் இமோஜி பெற்றது சமந்தா ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.