விஜய்யின் வாரிசு படத்தின் முதல் சிங்கிள்,இசை உரிமத்தை வாங்கியது யார் மாஸ் அப்டேட்!

விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி வருகிறது, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய்யின் 67 வது படத்தில் பிரேமம் பட ஹீரோவா? லோகேஷின் அல்ட்டிமேட் காமினேஷன் !

வாரிசு படத்தின் இசை உரிமையை பூஷன் குமார் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரிசு படத்தின் அனைத்து மொழி இசை உரிமையையும் டி சீரிஸ் நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்! துணிவு படத்தின் ட்ரைலர் எப்போது தெரியுமா?

வாரிசு படத்தின் இசை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.