வித்தியாசமான தலைப்புடன் வெளியான அதர்வா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் வாரிசு நடிகர்கள் பட்டியலில் மிகவும் முக்கியமான நடிகர் என்றால் அது அதர்வா முரளி தான். இவரது தந்தை முரளி 90களில் மிகவும் பிரபலமான நடிகர். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தனது தந்தை அளவிற்கு இல்லை என்றாலும் அதர்வா ஓரளவிற்கு நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் தள்ளி போகாதே என்ற படம் வெளியானது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் குருதி ஆட்டம், ட்ரிகர், ஒத்தைக்கு ஒத்த ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.

நிறங்கள் மூன்று

இந்நிலையில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் அதர்வா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அதர்வா தவிர முன்னணி நடிகர்களான சரத்குமார் மற்றும் ரஹ்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி படத்திற்கு நிறங்கள் மூன்று என வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர் . கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாறு படம் ஒரு மாறுபட்ட கதைகளத்துடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இங்த படமும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதர்வா நடிப்பில் ஆரம்பத்தில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சமீபகாலமாக அவர் படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது அவர் கைவசம் உள்ள படங்கள் வெற்றி பெற்றால் தான் அவரால் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியும். எனவே படங்கள் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment