ரீ என்ட்ரி கொடுக்கும் 80’ஸ் நாயகனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…..!

கோலிவுட்டில் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் மோகன். இவரை மோகன் என்று அழைப்பதைவிட மைக் மோகன் என்று அழைப்பது தான் அதிகம். ஏனெனில் இவரது படங்களில் பெரும்பாலும் மைக்குடன் தான் இருப்பார். கன்னட நடிகரான இவர் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்தார்.

மெல்லிய காதல் படங்களில் நடித்து பல பெண்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றன. அதிலும் சில படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார்.

என்னதான் வெற்றிப்பட நாயகனாக வலம் வந்தாலும் ஒருகட்டத்தில் அவர் படங்களுக்கான வரவேற்பு குறைய தொடங்கியது. படங்கள் சரியாக ஓடாததால் வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து விலகி விட்டார். இறுதியாக கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடிப்பில் சுட்ட பழம் என்ற படம் வெளியானது.

ஹரா

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் புதிய படம் மூலம் நாயகனாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி தமிழ் சினிமாவில் தாதா 89 என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் தான் நடிகர் மோகன் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

தற்போது இப்படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு ஹரா என தலைப்பு வைத்துள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தாடி மீசை என கண்ணாடி அணிந்து பயங்கர மாஸாக போஸ் கொடுத்துள்ளார் மோகன். இந்த படம் அவருக்கு ஹிட் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment