கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் தற்போது தமிழகத்திற்கு அவர் திரும்பியுள்ளார். திரும்பிய முதல் கையோடு தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனத்தின் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அதிக பயனாளர்களை கொண்ட அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தை சென்னையில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
பெருங்குடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் அமேசான் அலுவலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் நாலாவது அலுவலகமாக அமேசான் இன் அலுவலகத்தை 8.3 லட்சம் சதுர அடி பரப்பளவில் சென்னையில் கட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
6ஆயிரம் பணியாளர்களுடன் திறக்கப்பட்ட அமேசான் அலுவலகத்தால் அமேசான் பணியாளர்கள் எண்ணிக்கை 14 ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.துபாய் சென்று வந்த கையோடு தமிழகத்தில் மிகப்பெரிய அலுவலகத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்.