உலகின் முதல் இட்லி செய்யும் மிஷின் இந்தியாவில் அறிமுகம்

தமிழர்களின்  உணவில் முக்கியமான ஒர் உணவு இட்லி. இட்லியுடன் நன்றாக சாம்பாரை குழைத்து சாப்பிட்டால் அது தேவாமிர்தமாக இருக்கும்.

நல்ல காரமான சட்னி, சாம்பாருடன் அடுப்பில் இருந்து எடுத்த உடன் சுட சுட இட்லியை சாப்பிடுவது பலருக்கு அலாதி இன்பமாக இருக்கும்.

தெருவோரம் உள்ள ப்ளாட்பாரக்கடைகளில் எல்லாம் கூட்டம் அலைமோத காரணம் சூடான இட்லிதான். இந்த சூடான இட்லியை சுவைத்து சாப்பிடுவது மிகவும் அலாதியானது.

தென் மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களில் இட்லிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

பொதுவாக இட்லிக்கு மக்களிடம் இருக்கும் மாஸை அடிப்படையாக கொண்டும் பலரின் உடல் உழைப்பை குறைக்கும் வகையில்  ஒரே நேரத்தில் 72 இட்லிக்களை சட்னி சாம்பாருடன் தயாரிக்கும் வகையில் புதிய மெஷின் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

இயந்திர பொறியாளர்கள்  சரண் ஹயர்மாத், சுரேஷ் சந்திரசேகர்  ஆகியோர் இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment