
செய்திகள்
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: அசத்திய ஹீமா தாஸ்!!!
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டியானது நேற்றைய தினத்தில் கோலாகலமாக தொடங்கியது. குறிப்பாக ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், பாக்ஸிங் போன்ற போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.
அதே போல் இன்றைய தினத்தில் நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்களை ஹீமா தாஸ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து பளுதூக்கும் போடியில் இந்திய வீரர் சங்கேத் மகாதேவ் சர்க்கார் மொத்தமாக 248 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றுள்ளார்.
மேலும், நீச்சல் போட்டியில் கலந்திகொண்ட ஸ்ரீஹரி நடராஜ் என்பவர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
