வைகை அணையில் முதலாம் வெள்ள அபாய எச்சரிக்கை! 5 மாவட்டங்களுக்கு அபாயம்!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மிகவும் சிறப்பு பெற்ற அணையான வைகை அணையில் தற்போது முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

வைகை அணை

இந்த வைகை அணை யானது 71 அடி உயரமுள்ளது. இந்த நிலையில் இந்த 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டி உள்ளதால் அங்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளன. அதன்படி அணையின் நீர்மட்டம் 68.5 அடி உயர்ந்ததும் இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

வைகை அணைக்கு வரும் நீரின் அளவு  4025 கனஅடியும், நீர் இருப்பு 4810 மில்லியன் கன அடியாகவும் உள்ளது என்றும் கூறப்படுகிறது. வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 969 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment