சுமார் ஈராண்டுகளாக காத்துக்கொண்டிருந்த அஜித் குமார் ரசிகர்களுக்கு இன்று பெரும் திருவிழாவாக காணப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக அஜித் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.
இவ்வாறு உள்ள நிலையில் இன்று தமிழகமெங்கும் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் தல அஜித் நடித்த வலிமை திரைப்படம் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு திரையரங்குகளிலும் முதல் காட்சி விடியற்காலமே வெளியிடப்பட்டது.
அதுவும் குறிப்பாக 4 மணிக்கு தொடங்கி அனைத்து தேர்தல்களிலும் முதல் நாள் முதல் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் டிஜே போன்ற ஏராளமான செலிப்ரேஷன்களை கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகம் மட்டுமின்றி உலக அளவிலும் தல அஜித்தின் படம் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இன்றைய தினம் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது.
திரையரங்குகள் மட்டுமின்றி இணையத்தையும் வலிமை திரைப்படமே ஆண்டு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் எங்கு பார்த்தாலும் வலிமை திரைப்படத்தின் போஸ்டர்கள் செய்திகள் என அனைத்தும் குவிந்த வண்ணமாக காணப்படுகிறது.