பி.ஈ, பிடெக் படிப்புகளுக்கு முதல் நாளே குவிந்த விண்ணப்பங்கள்: மாணவர்கள் ஆர்வம்!

bc8061b3adf1b9ca746a0fc2b353a687

பிஇ பிடெக் உள்பட பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை நேற்று அறிவித்தது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இன்று காலை முதலே மாணவர்கள் சுறுசுறுப்பாக ஆன்லைன் மூலம் பிஈ உள்பட அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பித்து வருகின்றனர்

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இன்று ஒரே நாளில் பிஇ பிடெக் படிப்புகளுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று ஒரே நாளில் 25611 பேர்கள் விண்ணப்பம் செய்ததாகவும் அவர்களில் 10084 பேர்கள் கட்டணம் செலுத்தி உள்ளதாகவும் 5633 பேர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

பி.ஈ படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்து உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment