எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள்!

3f5a1920c626d269e681bcf5990899a7

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்பு தொடங்கியுள்ளதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன

அந்த வகையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. மாணவர்கள் உற்சாகமாக வகுப்புகளில் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான மாணவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் கூட்டமாக கூட கூடாது என்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment