இன்று முதல் எய்ம்ஸ் மாணவர்களுக்கு முதல் வகுப்புகள் தொடக்கம்-ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில்?

நம் தமிழகத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பலரும் கருத்து கூறி கொண்டு வந்தனர். அதுவும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது இது பற்றி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடப்பாண்டு கல்வி ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்லூரியில் நிச்சயமாக மருத்துவ படிப்புகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கலந்தாய்வில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய தினம் எய்ம்ஸ் மாணவர்களுக்கு முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஐந்தாவது தளத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. பல மாநிலத்தை சேர்ந்த 50 மாணவர்கள் இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment