காலை 6 மணி முதல் 7 மணி வரை… பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு..!!!

தமிழ்கத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், காலை காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனிடையே பொதுமக்கள் குறைந்த ஒலி மற்றும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே திறந்தவெளி பகுதிகளில் வெடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனைகள், வழிகாட்டுதல்கள், அமைதி காக்கும் இடங்களில் மற்றும் குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment