மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்கலாம்! உயர் நீதிமன்றத்தின் தடை ரத்து!

இந்தியாவில் இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றால் பட்டாசுகள் வெடிப்பது வழக்கம்.ஆனால் ஒரு சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.superme court

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தற்போது பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்கத்தில் எந்தவித பட்டாசு வெடிக்க கூடாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்தது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம் பட்டாசு  வெடிக்க விதித்த தடையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கும் முன் அனைத்து தரப்பினரையும் ஐகோர்ட் விசாரித்து இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்க படுவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் புரிந்தனர். தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்க படுவதை தடுக்க செய்த ஏற்பாடுகளை கவனிக்க உயர்நீதிமன்றம் தவறிவிட்டது என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment