பட்டாசு விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு; தொழிலதிபர் கைது! உரிமையாளர் தலைமறைவு!!

நம் தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்ற பெயரை பெற்றுள்ளது சிவகாசி. சிவகாசி சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி ஆக தமிழக அரசு அறிவித்திருந்தது. சிவகாசியில் ஏராளமான தொழிற்சாலைகள் காணப்படுகின்றன.

பட்டாசு

குறிப்பாக இங்கு தயாரிக்கப்படும் பட்டாசு, வெடி பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தொழில் நகரமாக ஜொலித்துக் கொண்டு உள்ளது சிவகாசி. பட்டாசு தொழிற்சாலைகள் என்றால் எப்படியாவது விபத்துக்கள் நேரிடும். அதேபோல் இந்த விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பும் அதிகளவிலும் ஏற்படும்.

இந்த நிலையில் சிவகாசி பட்டாசு விபத்து தொடர்பாக தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி சிவகாசியில் கடந்த 15ஆம் தேதி பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டது. விபத்து தொடர்பாக தொழிலதிபர் மணிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசி நேருஜி நகரில் கடந்த 15ஆம் தேதி பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக மூலப்பொருள் வழங்கியதாக தொழிலதிபர் மணிராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பட்டாசு விபத்து வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சி தேடிக் கொண்டுள்ளது. மணிராஜ் சகோதரரும் பட்டாசு ஆலை உரிமையாளருமான மாரிமுத்து தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். வெடி விபத்திற்கு காரணமான கட்டிட உரிமையாளர் ராமநாதன் மற்றும் அவரது மனைவி பஞ்சத்தையும் போலீசார் தீவிரமாக தேடுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment