நாமக்கல் பட்டாசு விபத்து; தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த மேட்டு தெரு பகுதியில் வசிப்பவர் தில்லை குமார். இவர் பட்டாசு மற்றும் நாட்டு வெடிமருந்து கடை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையொட்டி அதிகளவில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதால் தில்லை குமார் தன்னுடைய வீட்டிலும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார்.

370 மரங்கள் வெட்டிய விவகாரம்: வனச்சரகர் உள்பட 5 பேர் கைது!

இதற்கிடையில் அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து சிதறியுள்ளது. அதோடு சமையலுக்கு வைத்திருந்த சிலிண்டரும் வெடித்துள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக அருவில் இருந்த வீடுகள் தரைமட்டானது. அதோடு 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சூழலில் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மது பிரியர்கள் கவனத்திற்கு! போலீசார் கடும் எச்சரிக்கை..!!

மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.