பட்டாசுகள் வெடித்து விபத்து; 4 பேர் உயிரிழப்பு..!!

நாமக்கல் அருகே பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் இன்று அதிகாலையில் தில்லைக்குமார் என்பவர் பட்டாசு விற்பனை செய்யவும், அனுமதிக்கவும் அனுமதி பெற்று குமரி பாளையத்தில் குடோன் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்து வந்தார்.

அதன் ஒரு பகுதியாக வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது தீடீரென ஏற்பட்ட உராய்வின் காரணமாக பட்டாசு வெடித்துள்ளது. அதே சமயம் சிலிண்டர் தீப்பிடிக்க தொடங்கி உள்ளது.

இந்த விபத்தில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்ததையடுத்து தில்லை குமார் உட்பட 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதே போல் 10-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்து குறித்து தடவியல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.