Connect with us

நியூ இயர் வரையில் பட்டாசு வெடிக்க கூடாது!! – டெல்லி அரசு உத்தரவு!!

pattaus

செய்திகள்

நியூ இயர் வரையில் பட்டாசு வெடிக்க கூடாது!! – டெல்லி அரசு உத்தரவு!!

டெல்லியில் அடுத்தாண்டு ஜன.1ம் தேதி வரை பட்டாசு பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

நம் இந்தியாவை பொறுத்த வரையில் காற்று மாசுபாட்டில் முதல் மாநிலமாக டெல்லி விளங்குகிறது. குறிப்பாக படிப்படியாக உயர்ந்து வரும் தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக காற்று மாசுபாடு என்பது  அதிரித்து வருகிறது.

இவற்றை தடுக்கும் விதத்தில் அம்மாநில அரசு பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன் படி, வருகின்ற டெல்லியில் அடுத்தாண்டு ஜனவரி1-ம் தேதி வரையில் பட்டாசு பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார்.

மேலும், காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top