
தமிழகம்
விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கும் வளையபட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாத்தூர் அடுத்த கீழான்மறைநாடு என்ற கிராமத்தில் முத்துமீனா என்ற பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. கிட்டத்தட்ட 3 வருடங்களாக பட்டாசு ஆலை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இன்றைய தினத்தில் சுமார் 12 பேர் ஆலையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஒரு அறையில் மட்டும் சத்தம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஜெயராமன் என்பவர் பட்டாசு வெடித்து கருகிய நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் அவருடன் பணியாற்றிய புவனேஸ்வரன் என்பவர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 பேரை மீட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சிறுவர்கள் விளையாடும் பட்டாசு தயாரிக்கும் போது விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட தகவலில் கூறப்படுகிறது.
