அருணாசலத்தில் பயங்கர தீ விபத்து: 700 கடைகள் நாசம்!!

அருணாசலப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 700 கடைகள் எரிந்து தீயில் நாசமாகியுள்ளது.

அருணாசலப்பிரதேச மாநிலத்தில் நஹர்லகுன் சந்தையில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நஹர்லகுனில் நீர் நிரப்பும் நிலையங்கள் இல்லாததால் குறித்த நேரத்தில் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. அதே சமயம் உயிர் சேதங்கள் ஏதும் நிகழவில்லை என கூறப்படுகிறது.

குறிப்பாக முதலில் 2 கடைகளுக்கு பற்றிய தீயானது மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவ தொடங்கியது. இதன் காரணமாக சுமார் 700 கடைகள் தீயில் கருகி நாசமாகியது.

மேலும், அப்பகுதி முழுவது எரிந்து நாசமாகியுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அரசு நடத்தும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment