மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு! 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!!
உலகம் நவீனத்தை நோக்கி நகர நகர விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. ஏனென்றால் எங்கு பார்த்தாலும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது.விபத்துகளின் காரணமாக பல பொருள் சேதங்களும் படுகாயங்களும் ஏற்படுகிறது.
இதனையும் தாண்டி இந்த விபத்தின் காரணமாக உயிரிழப்பு அதிகமாக நிகழ்கிறது. விபத்துகள் சாலைகள் தொடங்கி வீடுகள் வரை அனைத்து பகுதிகளிலும் விபத்துகள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது.
அந்த வரிசையில் இன்றைய தினம் காலையில் மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மும்பையில் 20 மாடி கட்டிட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்தில் காயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுக்குமாடி கட்டிடத்தின் 18வது தளத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டிக் கொண்டு வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் தற்போது 13 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
