News
சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து: ஆயிரம் கோடி சேதம் என தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பூசி கண்டுபிடித்த சீரம் நிறுவனத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து சதி அல்லது மின்சார கசிவு உட்பட தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் சீரம் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்
இந்த நிலையில் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஆயிரம் கோடி மதிப்பிலான தடுப்பூசி கண்டுபிடிக்கும் உபகரணங்கள் சேதம் அடைந்து இருப்பதாக சற்று முன் வெளியான தகவலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது
இருப்பினும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பகுதியில் இந்த தீ விபத்தால் எந்த பாதிப்பும் இல்லை என சீரம் நிறுவனத்தின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த நிறுவனத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் தீ விபத்து நடந்த பகுதிகளில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த பகுதியில் நடைபெற்று வரும் பணி மீண்டும் ஒருசில நாட்களில் தொடங்கப்படும் என்றும் சீரம் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
