சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2-வது முறையாக தீ விபத்து!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 பேர் மிக மோசமான நிலையில் கொரோனா வார்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில் மின்கசிவு காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த வர்களை மீட்டு வேறு வார்டுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தீயை போராடி அணைத்ததாக  கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.