
Tamil Nadu
கடலூர் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து-3 பேர் உயிரிழப்பு.!! ஸ்டாலின் இரங்கல்;
நம் தமிழகத்தில் மிகவும் முக்கியமான தொழில் என்றால் அதனை பட்டாசு உற்பத்தி தொழில் என்று கூறலாம். இதற்கு பேர்போன ஊராக சிவகாசி காணப்படுகிறது. சிவகாசியில் அதிகளவு பட்டாசு தொழிற்சாலைகள் காணப்படுகின்றன.
இருப்பினும் கூட ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டாசு தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. ஆனால் இந்த தொழிற்சாலைகளில் ஒரு தீப்பொறி பட்டால் கூட உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு சேதாரம் ஏற்படும்.
அந்த வகையில் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு 3 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டம் அருகே நடந்துள்ளது. கடலூரில் வானவேடிக்கை பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 2 பேர் படுகாயம் உடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்த முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சித்ரா, அம்பிகா, சத்யராஜ் ஆகிய 3 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துமனையில் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
