செங்கல் சூளையில் தீ விபத்து: 9 பேர் உடல் கருகி பலி..!!

பீகாரில் செங்கல் சூளையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

பீகாரில் மாநிலம் கிழக்‍கு சம்பரன் மாவட்டம் ராம்கர்வா பகுதில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையில் செங்கலை சுடுவதற்காக தொழிலாளர்கள் அதனை அடுக்கி வைத்து பின்னர் தீவைத்துள்ளனர்.

புனேவில் பயங்கரம்!! ‘த்ரிஷ்யம்’ படம் பார்த்து கொலை செய்த சகோதரர்கள்..!!

இந்த சூழலில் தீ எரிவதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது பிரமாண்ட புகை போக்கி திடீரென எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது. இதில் 9 தொழிலாளர்கள் மீது தீ பரவியதை அடுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதி உள்ளனர்.

அடுத்த 2 மணி நேரத்திற்கு..19 மாவட்டங்களில் அலர்ட்!!

அதே போல் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து இரங்கள் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.