முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: ஒரு வாரத்தில் இத்தனை லட்சமா?

உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு திரிபு ஆனது 8 பிரிவுகளாக உருமாற்றம் அடைந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் பாதிப்பானது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கொரோனாவின் தொற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் அண்மையில் சுகாதாரத் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என ஜூலை 4-ஆம் தேதி தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் தற்போது சென்னையில் முகக்கவசம் அணியாமல் இருந்த நபர்களிடம் ரூ. 11.70 லட்சம் அபராதம் பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் முகக்கவசம் அணியாத 2,340 நபர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களிமிருந்து ரூ. 11.70 லட்சம் அபராதம் பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment