இனிமேல் சாலையில் ஆடு,மாடுகள் சுற்றித் திரிந்தால் ரூ.10000 அபராதம்!

நம் தமிழகத்தில் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு, சாலைகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவது போன்ற பல காரணங்கள் உள்ளன.

ஆடுகள்

இருப்பினும் கால்நடைகளாலும் கூட ஒரு சில நேரத்திற்கு சாலை விபத்துகள் ஏற்படுவது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. ஏனென்றால் சாலைகளில் ஆடுகள்,மாடுகள் நடந்து சுற்றி திரிவதால் பெருவாரியான போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுகின்றன.

இதுகுறித்து தற்போது திருச்சி மாநகராட்சி கடும் உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கேட்பாரின்றி ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகள் கேட்பாரின்றி சுற்றித்திரிந்தால் அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று திருச்சி மாநகராட்சி எச்சரித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த பத்தாயிரம் ரூபாய் அபராதத் தொகையை 3 நாட்களுக்குள் கால்நடைகள் உரிமையாளர் செலுத்த வேண்டும் இல்லை. செலுத்தத் தவறும் பட்சத்தில் கால்நடைகளை சந்தையில் விற்று அந்த பணத்தை மாநகராட்சி கருவூலத்தில் சேர்க்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதனால் சாலைகளில் இடையூறு ஏற்படுவது குறைக்கப்படும் என்றும், சாலை விபத்துக்கள் குறிப்பாக கால்நடைகள் விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment