Connect with us

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரியவருக்கு ₹25000 அபராதம்.!!

அதிமுக

தமிழகம்

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரியவருக்கு ₹25000 அபராதம்.!!

இன்றைய நாள் அதிமுகவிற்கு நீதிமன்றம் செல்கின்ற நாளாக காணப்பட்டது. ஏனென்றால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்திருந்த வழக்கின் தொடர்பாக இன்று விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கும் தொடுக்கப்பட்டது. ஏனென்றால் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி 5000 கோடி செலவு செய்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் அவர் மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மனுதாரர் கூறியிருந்தார். எனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து வழக்கு விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு தொடுத்தவருக்கு அபராதம் விதித்துள்ளதாக தெரிகிறது. அதன்படி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரியவருக்கு 25000 ரூபாய் அபராதத்தை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.

அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப்பின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். பொதுநல வழக்கு என்ற பெயரில் விளம்பர நோக்கத்துடன் மனுதாரர் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த ஒரே வாரத்தில் வழக்கு என்றும் அதிமுக நடவடிக்கையால் மனுதாரர் பாதிக்கப் போவதில்லை என்றும் கூறியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top