Connect with us

நடிகர் விஜய்-க்கு விதித்த அபராதம்: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!!

puli movie vijay

பொழுதுபோக்கு

நடிகர் விஜய்-க்கு விதித்த அபராதம்: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!!

கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் மீது வருமான வரித்துறையினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். வெளிநாட்டில் கார் வாங்கிய விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் அடுத்தடுத்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2016,17- ஆம் ஆண்டுக்கான வருமானம் வரி கணக்கில் புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை நடிகர் விஜய் மறைத்ததாக கூறி 1.50 கோடி ரூபாய் வருமான வரித்துறை அபராதம் விதித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஜய் சட்டப்படி, உரிய காலத்தில் பிறப்பிக்கப்படாததால் அபராதம் உத்தரவு ரத்து செய்ய மனு தாக்கல் செய்திருந்தார். இந்த சூழலில் நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்து வருமான வரித் துறை உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

அதோடு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 16 ம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top