Connect with us

‘காணாமல் போன சிலை கண்டுபிடிப்பு..!!’ சிக்கிக்கொண்ட குருக்கள்-நடந்தது என்ன?

kaithu 1

தமிழகம்

‘காணாமல் போன சிலை கண்டுபிடிப்பு..!!’ சிக்கிக்கொண்ட குருக்கள்-நடந்தது என்ன?

‘காணாமல் போன சிலை கண்டுபிடிப்பு..!!’ சிக்கிக்கொண்ட குருக்கள்-நடந்தது என்ன?

நம் தமிழகத்தில் அதிகளவு சிலை கடத்தல் கும்பல் கைவரிசை காட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த சிலை கடத்தல் செயலில் ஒரு சில கோவில்களில் கோவில் பூசாரிகள் செயல்படுவது பலருக்கும் வியப்பை தருகிறது.

அந்த வகையில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து சிலைகள் மீட்கப்படுகிறது. அதன்படி சீர்காழி அருகே நென்மேலி விசாலாட்சி விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில் இருந்து காணாமல் போன சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

கருவறையில் அம்மன் சிலைக்கு பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாயகர், பிரதேச நாயகி உலோகச் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு சிலைகளையும் ரூபாய் 2 கோடிக்கு மேல் விற்கும் முயற்சியில் கோவில் கருவறைக்குள் மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

நெம்மேலி  கிராமத்தை சேர்ந்த கோவில் சூரியமூர்த்தி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருக்கள் சூரியமூர்த்தி, வீட்டில் மறைத்து வைத்திருந்த சனீஸ்வர கவசம், ஸ்ரீ காத்தாயி அம்மன் வெள்ளி கவசம் உள்ளிட்டவைகளும் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் காணாமல் போனது என்று எண்ணிய சிலைகள் குருக்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது  அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top