திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் சோதனை நடைப்பெற்றது. குறிப்பாக 165 கோடி வரிஏய்ப்பு செய்துள்ளதாக வரித்துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்த சூழலில் மதுரையில் 30 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், சென்னையில் 10 இடங்களிலும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு கணக்குவழக்குகளில் முறையாக வரிசெலுத்தி வருகிறார்களா? முறையாக கணக்கில் காட்டியுள்ளார்களா? போன்ற அடிபட்டையில் ஆய்வு நடத்தி வருவதாக தெரிகிறது.
இத்தகைய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் படலாம் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.