நிதி நிறுவன ஊழியர்கள் அடாவடி….! மனமுடைந்த விவசாயி; தூக்கிட்டு தற்கொலை!!!
தமிழகத்தில் பல நிதி நிறுவனங்கள் உருவாக்கி உள்ளது. இவை சாமானிய மக்களுக்கு நிதியினை வழங்கி உதவி கொண்டு வருகிறது. ஒரு சில தனியார் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள் அடாவடி செய்வதாக அப்போது ஊடகங்கள் வாயிலாக செய்திகள் கிடைக்கிறது.
இதன் விளைவாக விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன்படி செஞ்சியை அடுத்த தேவனூரில் தனியார் நிதி நிறுவன ஊழியரின் அடாவடியால் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். விவசாய பணிக்காக சின்னத்துரை என்பவர் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் டிராக்டரை வாங்கியுள்ளார். கடன் தொகை செலுத்தவில்லை என விவசாய நிலத்தில் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்.
தனியார் நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்த விவசாயி சின்னத்துறை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் சின்னதுறை இறப்புக்கு காரணமான நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். உயிரிழந்த விவசாயத்துறையின் உடலை சாலையில் வைத்து நாலு மணி நேரமாக உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
