Connect with us

சென்னை நிதி நிறுவனம் கொள்ளை வழக்கு: 2 பேர் சரண்!!!

theft inhome87 1572594290 1572604876 1660707665

தமிழகம்

சென்னை நிதி நிறுவனம் கொள்ளை வழக்கு: 2 பேர் சரண்!!!

சென்னை வடபழனியில் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் கொள்ளை சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வடபழனியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தி முனையில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்தாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சையத் என்பவர் ஒருவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.  அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது கிஷோர் கரண், தமிழ்செல்வன் ஆகிய இருவரும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளதாக தெரிகிறது. மேலும், மீதமுள்ள நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top