
செய்திகள்
களத்திலேயே உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு!!
தமிழர்கள் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டும் வீர விளையாட்டுக்காக காணப்படுகிறது. அந்த வரிசையில் கபடியும் வீர விளையாட்டு என்று கூறலாம். ஏனென்றால் கபடியில் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதங்கள் நடைபெறும்.
இருந்தாலும் தமிழர்களின் மாநில விளையாட்டாக கபடி நிகழ்கிறது. ஒரு சில இடங்களில் கபடியில் உயிரிழப்புகள் ஏற்படும். அதனை வெளிப்படுத்தும் விதமாக வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படமும் வெளியானது.
இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென்று கபடி விளையாடிக் கொண்டிருந்த வீரர் களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த வீரரின் கடைசி நிமிட விளையாட்டு சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில் கபடி வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கடலூரில் கபடி போட்டியில் பங்கேற்ற உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். பண்ருட்டி அருகே போட்டியின் போது உயிரிழந்த இளைஞர் சஞ்சய் குடும்பத்திற்கு இரங்கலையும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
