நிதியமைச்சரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக விமான நிலையம் சென்றார். அப்போது விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் நிதி அமைச்சரிடம் லேப்டாப்பை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று கூறிய தடுத்தனர்

இதனை அடுத்து லேப்டாப் எடுத்துச் சொல்லக் கூடாது என்ற என்ற கட்டுப்பாடும் இல்லை என்று நிதி அமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் தான் நிதியமைச்சர் என்றும் அந்த அதிகாரியிடம் அவர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசினார். எனினும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சை பொருட்படுத்தாது பாதுகாப்பு அதிகாரிகள் லேப்டாப்பை எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று தனது முடிவில் உறுதியாக இருந்தனர் இதனால் அந்த இடத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த விமான நிலைய உயர் அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகளின் செயலுக்கு நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டனர். இதனை அடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி நிதி அமைச்சரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படை அதிகாரிகளும் நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டார்கள். இதன் பின்னரே நிதி அமைச்சர் தனது லேப்டாப்புடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்.