#Breaking மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறைக்கு 18,661 கோடி ஒதுக்கீடு – தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும் என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் 2023) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு தமது முதலாவது இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. இதன் பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு 2-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தற்போது திமுக அரசு தாக்கல் செய்யும் 3-வது காகிதமில்லா பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்து வருகிறார்.

இந்த பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் திறக்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மேம்பாட்டுக்கு ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.