டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதி!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மதியம் 12 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இதுகுறித்து நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

63 வயதான மத்திய நிதியமைச்சர் எல்லா சீதாராமன் வழக்கமான பரிசோதனைகளுக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது உடலுக்கு வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் மற்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விளக்கத்தை அடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதாரண பரிசோதனைக்கு ஆகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.