Connect with us

இறுதியாண்டு செமஸ்டர் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து: துணை முதல்வர் உத்தரவு

News

இறுதியாண்டு செமஸ்டர் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து: துணை முதல்வர் உத்தரவு

7c54561458b72f02e161f9fc531dd4b8-1

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என மனித மேம்பாட்டு துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே

இதற்கு இன்று கடிதம் எழுதிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் செப்டம்பருக்குள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது என்று விளக்கமளித்துள்ளார். இருப்பினும் நாடு முழுவதும் செமஸ்டர் தேர்வுகளை நடத்த யுஜிசி ஆலோசனை செய்து வருகிறது

இந்த நிலையில் அதிரடியாக டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வு ரத்து என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்தும் அடங்கும் என டெல்லி அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் நிலையில் டெல்லி அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்பதும் இந்த அறிவிப்பை துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து டெல்லியை போல் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளை ஏற்று அந்தந்த மாநில முதல்வர்கள் இது குறித்து விரைவில் முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top